கிழக்குமாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை பேசியதை கண்டித்து மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி ( வீடியோ & போடோஸ் )
(என்டன்)
திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வின் போது கிழக்குமாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை பேசியதை கண்டித்து மட்டக்களப்பு நகரில் 26.05.2016 வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மங்கள ராமாய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் இடம்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில் அம்பாறை மாவட்ட கெவிலியாமடு பிரதேசத்தை சேர்ந்த விகாராதிபதி மகானாளந்த தேரர் மற்றும் அம்பாறை சின்னவத்த பிரதேசத்தை சேர்ந்த விகாராதிபதி குசலாநதி தேரர் ஆகியோருடன் இணைந்து இப்பிரதேச பொதுமக்களுடன் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.










