“பாடுமீன்களின் சமர்" பிரபல ஆண்கள் பாடசாலைகளான புனித மிக்கேல் கல்லூரியும், மெதடிஸ்த மத்திய கல்லூரியும் மோதவுள்ளன.
(என்டன்)
நேர்மையான வெற்றி தோல்விகளை மனதார ஏற்றுக்கொள்ளும்
உறுதியான மனப்பக்குவத்துடன்; மட்டுமா நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலைகளான புனித
மிக்கேல் கல்லூரியும், மெதடிஸ்த மத்திய கல்லூரியும் மோதவுள்ளன.
இருந்தாலும், உணர்வுபூர்வமாகவும்
குதூகலத்துடனும் இவ் விறுவிறுப்பான
போட்டியினை ரசிப்பதற்காகவும், அணிகளை உற்சாகப்படுத்துவதற்காகவும் அணிதிரளும்
ஆதரவாளர்களே !
கடின உழைப்புடன் கூடிய பயிற்சிகளின் பின் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரிக்கும்
கனவுடன் பலப் பரீட்சையில் மோதவிருக்கும் இரு அணிவீரர்களுக்கும் இடையூறு
ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைத்து சமூகங்களின் நேர்த்தியான வேண்டுகோள்
ஆகும்.