Breaking News

நடுக்கடலில் சரக்கு கப்பலுடன் மீன்பிடி படகு விபத்து 17 பேர் ?

கிழக்கு சீனக்கடல் பகுதியில் சரக்கு கப்பலுடன் மீன்பிடி படகு மோதி விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கிய 17 பேர் கதி என்னவாயிற்று? என்பது தெரியாத நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் சீனாவைச் சேர்ந்த கடலோரக் காவல் படையினர்  ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் நேரப்படி நேற்றிரவு சுமார் பத்தரை மணியளவில் வெளிநாட்டுக்கு சொந்தமான அந்த சரக்கு கப்பலுடன் சீனாவைச் சேர்ந்த பதிவு எண்: 58398 கொண்ட அந்த மீன்பிடி படகு மோதியதில் படகில் இருந்த 19 பேர் கடலில் மூழ்கினர். இதுதொடர்பான தகவல் அறிந்ததும் விரைந்துவந்த கடலோரக் காவல் படையினர் இதுவரை இரண்டு மீனவர்களை உயிருடன் மீட்டுள்ளனர்.

எஞ்சியுள்ளவர்களையும் மீட்கும் முயற்சியில் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.