பூமியின் அளவயொத்த மேலும் 100 புதிய கிரகங்கள் !!
புதிய கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில் சக்தி வாயந்த டெலஸ்கோப்பை பொருத்தி விண்வெளியில் பறக்க விட்டுள்ளது. அந்த விண்கலம் விண்வெளியில் நிகழும் அதிசயங்கள் மற்றும் புதிய கிரகங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
அந்த வகையில் இதுவரை 1284 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. இது கடந்த காலங்களை விட இரு மடங்கு ஆகும்.
இந்த நிலையில் மேலும் 100 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. இது பூமி போன்ற அளவில் உள்ளது. இங்கு திரவநிலையில் தண்ணீர், காற்று உள்ளது. எனவே இது உயிரினங்கள் வாழ தகுதியுள்ளவை என கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து டெலிகர் பைரஸ் மாநாட்டில் விஞ்ஞானிகள் கூடி விவாதித்தனர். இது குறித்து கெப்லர் மிஷன் விஞ்ஞானி டாக்டர் நடாலி வாழத்தகுதியான 1000 கோடி கிரகங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
அவற்றில் 24 சதவீதம் பூமியை விட 1.6 மடங்கு சிறியது. அவற்றில் அதிக அளவில் பாறைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித் தார். தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள 100 புதிய கிரகங்களில் ஆவி நிலையில் தண்ணீர், ஆக்சிஜன், மீத்தேன், கார்பன்டை ஆக்சைடு உள்ளிட்டு வாயுக்கள் உள்ளனவா என மேற் கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.