சோனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட அனிருத்!
மிகக் குறுகிய காலகட்டத்தில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழும் அனிருத், முன்னணி இசை நிறுவனமான சோனியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் மூலம் அனிருத்தின் தனி இசை ஆல்பங்கள், இசை நிகழ்ச்சிகளின் உரிமை சோனிக்கு கைமாறுகிறது.
விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இப்போது அனிருத்தான் இசை அமைப்பாளர். தற்போது அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு அனிருத்தான் இசையமைக்கிறார்.
இவருடைய இசையில் தற்போது ‘ரெமோ', ‘ரம்' ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் மோகன் ராஜா இயக்கும் படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அனிருத்தின் தனிப்பாடல்கள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளின் உரிமைகளை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த பாடல்களை உலக அளவில் பிரபலமாக்க சோனி நிறுவனம் ஒப்பந்தத்தை போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.