Breaking News

லண்டன் நகரில் தாழ் இறங்கிய சாலை ஊஞ்சலாடும் கார்

லண்டன் நகரில் உள்ள கிரீன்விச் நகரில் பாதாள சாக்கடையின் மீது அமைத்திருந்த சாலை வாயைப் பிளந்து கொண்டதால் அங்கு நின்றிருந்த காரின் பெரும்பகுதி பள்ளத்தில் தொங்கிய நிலையில் இருசக்கரங்கள் மட்டும் சாலையில் பதிந்திருக்கும் நிலையில் ஊஞ்சலாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

நேற்று அதிகாலை கிரீன்விச் நகரின் சார்ல்டன் தெரிவில் அமைந்துள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அந்த காருக்கு இந்த நிலை நேர்ந்தபோது, காருக்குள் அதிர்ஷ்டவசமாக யாருமில்லை என போலீசார் தெரிவித்தனர். நல்லவேளையாக பாதாள சாக்கடைக்குள் இருந்த ஒரு இரும்பு பைப்பின் பிடிமானத்தில் தொங்கி நின்றது