Breaking News

'நான் சொன்னேனா... சினிமாவுக்கு முழுக்குப் போடுகிறேன் என்று ? சமந்தா

சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கப் போவதாக நான் ஒருபோதும் சொல்லவில்லை. அதிகப் படங்களில் நடிக்காமல், தேர்ந்தெடுத்து நிதானமாக நடிக்கப் போகிறேன் என்றுதான் சொன்னேன். அது புரியாமல் எனக்கு ஓய்வு கொடுத்துவிட்டன பத்திரிகைள் என்கிறார் நடிகை சமந்தா. தமிழில் சமந்தா நடித்த தெறி, 24 ஆகிய தமிழ்ப் படங்கள் சமீபத்தில் வெளியாகின. இரண்டுமே அவருக்கு வெற்றிப் படங்கள்தான். இதன் மூலம் சமந்தா நடித்தால் ஓடாது என்ற பழியிலிருந்து வெளிவந்துவிட்டார்.

அந்த சந்தோஷத்துடன் ட்விட்டரில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில், "இன்று நிம்மதியாகத் தூங்குவேன். இந்தக் கோடையின் கடைசிப் படமும் வெளியாகிவிட்டது. கடந்த 8 மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. அந்த இக்கட்டான நிலைமைகளைச் சமாளித்துவிட்டேன். இந்தச் சமயத்தில் எனக்கு ஆதரவளித்த என் குடும்பத்துக்கு நன்றி. இக்காலங்களில் நான் நல்ல மகளாக, நண்பராக, கேர்ள்ஃபிரண்டாக இல்லை. இதைச் சரிகட்ட, இனி வேகமாக எதையும் செய்யப்போவதில்லை. சிறிது காலத்துக்கு எந்தவொரு புதிய படத்தையும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை," என்று கூறியுள்ளார்.