ரகசிய கமராவிற்கு பயந்து ஹோட்டலில்தங்காது அமெரிக்காவில் வீடு தேடும் ப்ரியங்கா!
ஹோட்டல்களில் தங்கும்போது ரகசிய கேமரா ஆபத்து நிறைய இருப்பதால், அமெரிக்காவில் சொந்த வீடு தேடுகிறேன் என்கிறார் நடிகை ப்ரியங்கா சோப்ரா. இப்போதெல்லாம் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத் தளப் பக்கங்கள் மற்றும் குழுக்களில் அதிகம் உலா வருவது நடிகைகளின் அந்தரங்க படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள்தான். பெரும்பாலும் ஹோட்டல்களில் குளியல் அறைகளில் அவர்கள் குளிப்பதை ரகசிய கேமிராக்கள் மூலம் படம் பிடித்து இணையத்தில் ஏற்றி விடுகிறார்கள். படுக்கை அறையில் இருக்கும் படங்கள், ஆண் நண்பருடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் தப்புவதில்லை.
ப்ரியங்கா சோப்ரா இதற்காக போலீசில் புகார் செய்யப் பயந்து, அந்தப் படத்திலிருப்பது நானல்ல என்று கூறிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுகிறார்கள் நடிகைகள். "நான் ஹோட்டல்களில் தங்க பயப்படுவதே இந்தப் பிரச்சினைக்காகத்தான்" என்கிறார் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா.