70 அமெரிக்க இராணுவ வீரர்கள்களின் விவரங்களை வெளியிட்ட ISIS தீவிரவாதிகள் பகிரங்க கொலைமிரட்டல்
சிரியாவில் தங்களுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்க இராணுவ வீரர்கள் 70 பேரின் பட்டியலை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இங்கிலாந்தில் இருந்து செயல்படும் இணையதளம் மூலமாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அமெரிக்க இராணுவ வீரர்கள் 70-க்கும் அதிகமானோரின் பெயர்கள், வீட்டு முகவரி மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட விவரங்கள் அதில் உள்ளன. மேலும் பட்டியலில் உள்ளவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை கொல்லுங்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் ஹாக்கிஸ் டிவிசன் என்ற இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக ஐ.எஸ்.ஐ.எஸ் ஹாக்கிஸ் டிவிசன் பகுதியினை கண்காணித்து வந்த பிரிட்டனை சேர்ந்த ஹாக்கர் ஜூனைடு ஹூசைன் கடந்த ஆகஸ்ட் மாதம் சிரியாவில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டார்.



