எனக்கு இன்னும் கல்யாணமெல்லாம் நடக்கலீங்க!
எனக்கு திருமணமாகிவிட்டதாக வந்த செய்தி பொய்.. அதை நம்ப வேண்டாம் என்று நடிகை பூனம் பாஜ்வா தெரிவித்தார். சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் நடிகை பூனம் பாஜ்வா விற்கு திருமணம் நடந்துவிட்டதாக செய்தி வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை பூனம் பாஜ்வா, 'அது முற்றிலும் தவறான செய்தியாகும். சமீபத்தில் எனது தங்கைக்குத் தான்,திருமணம் நடைபெற்றது. அதை எனக்கு நடந்ததாக எண்ணி தவறான செய்தி வெளியிட்டுள்ளனர். எனக்கு திருமணம் நடக்கும் போது, இந்த உலகமே அறியும் வகையில்,வெகு சிறப்பான முறையில் நடைபெறும்', என்றார்.
தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்பட பல படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. இப்போது குண்டு கத்திரிக்காய், போகி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.