சட்டவிரோத ஆயுதங்களை கையளிக்கவென மீண்டும் பொதுமன்னிப்பு காலம் 30.05.2016 முதல் 17.06.2016 வரை
அனுமதிப்பத்திரங்கள் இன்றயனிலயில் சட்டவிரோதமாக வைத்திருக்கும் அனைத்து ஆயுதங்களை ஒப்படைக்கவென எதிர்வரும் 30.05.2016 முதல் 17.06.2016ஆம் திகதிவரையான பொது மன்னிப்பு காலத்தை மீண்டும் அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி சட்டவிரோதமாக வைத்திருக்கும் அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலக அலுவலகங்கள் ஆகியவற்றில் ஒப்படைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



