சீனாவில் 100 கி.மீட்டர் வேகத்தில் இயங்கும் காந்த சக்தியில் இயங்கும் ரெயில்
சீனாவில் அதிவேகமாக இயக்கப்படும் புல்லட் ரெயில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது காந்த சக்தியால் இயங்கும் ரெயில் இயக்கப்பட உள்ளது. சாங்ஷா நகரில் ஓடும் இந்த ரெயில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரில் இயக்கப்பட உள்ள மிக வேகமான இந்த ரெயில் ரெயில் நிலையத்துக்கும், விமான நிலையத்துக்கும் இடையேயான 18.55 கி.மீட்டர் தூரத்தை சுமார் 19 நிமிடம் 30 வினாடிகளில் கடக்க கூடியது. இடையில் ஒரு நிறுத்தத்தில் மட்டுமே நிற்கும்.
மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தில் இயங்கும் திறன் படைத்த இந்த ரெயிலில் 365 பேர் பயணம் செய்யலாம். இது அடுத்த மாதம் முதல் ஓடத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு நகரமான சாங்சங் நகரம் 3 விதசக்திகளால் இயங்கும் ரெயிலை இயக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.