Breaking News

இயற்கை வாயு மூலம் மின்சரத்தை உற்பத்தி செய்ய தீர்மானம்

அனல் மின் நிலையங்களுக்கு மாற்றிடாக  எல்.என்.ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவினை எரிபொருளா பயன்படுத்தக்கூடிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பது தொடர்பிலான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜப்பான் மற்றும் இந்திய அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது,

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவையின் உப குழு நடாத்திய  எதிர்காலத்திற்கான மின் சக்தி தேவை தொடர்பிலான ஆய்வின் பின்னரே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்கால மின்சார தேவையினைப் நிவர்த்தி செய்யவென உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில்  சிக்கல்நிலமை  காணப்படுவதால்  எதிர்கால மின் விநியோகத்தை  கருத்தில்கொண்டு மேற்படி தீர்மானத்தை அரசு எடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.