ஆணைக்குழுவின் முன் சமுகமளிக்க முடியாது !
பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா மற்றும் மகள் தெஜனி ஆகியோர் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தம்மால் ஆணைக்குழுவின் முன்னால் ஆஜராக முடியவில்லையென இரண்டாவது தடவையாகவும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இவர்கள் தமது சொந்த தேவைக்கென விமானப்படை விமானங்களை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கென கடந்த 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளிலும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருபோதிலும் தாம் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் சமூகமளிக்க முடியாது என அறிவித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.