மீண்டும் பேயாக மாறும் திரிஷா?
'நாயகி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பேய் படத்தில் திரிஷா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 13 வருடங்கள் தாண்டியும் தமிழ் சினிமாவில் வெற்றி நாயகியாக வலம் வரும் திரிஷா, தற்போது 'நாயகி' என்ற திகில் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தனுஷின் 'கொடி', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'போகி' ஆகிய படங்களும் திரிஷா கைவசம் உள்ளன. இந்நிலையில் 'மதுர' இயக்குநர் மாதேஷ் இயக்கும் புதிய படத்தில் திரிஷா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.