4 சிறுநீரகங்களுடன் வாழும் 17வயதான சீன சிறுமி
பொதுவாக மனிதர்கள், 2 சிறுநீரகங்களுடன் பிறந்து வாழ்கிறார்கள். ஆனால் சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் 4 சிறுநீரங்களுடன் வாழ்ந்து வருகிறார்.
அவரது பெயர் ஸியோ லின். 17 வயதான இவளுக்கு அடிக்கடி முதுகு வலி ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தாள். ஒரு கால கட்டத்தில் வலி அதிகமாகவே அல்ட்ராசவுண்டு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.
அப்போது அவளுக்கு 4 சிறுநீரகங்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்று 4 சிறுநீரங்களுடன் மனிதர்கள் பிறந்து வாழ்வது அரிதாகும். 1000 பேரில் யாருக்காவது ஒருவருக்கு அது போன்று சிறுநீரகங்கள் இருக்கும்.
இது ஒருவகை நோயாகும். அதற்கு ‘ரீனல் டுயூலிஎலஸ் மான்ஸ்ட்ரோ சிட்டி’ என பெயர் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.



