Breaking News

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய ஆலய திறப்பு விழா

(லியோன்)

இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ ஒன்றியத்தின் கூட்டு முயற்சியால் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள  புதிய ஆலய திறப்பு விழா 25.06.2016 இடம்பெற்றது .

ஆரம்ப நிகழ்வாக நிகழ்வுக்கு  பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்ட அதிதிகளை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது .

இதனை தொடர்ந்து புதிய ஆலயத்தினை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரினால் திறந்து வைக்கப்பட்டது .  

இடம்பெற்ற புதிய ஆலய திறப்பு விழா நிகழ்வில்  கத்தோலிக்க ஒன்றியத்தின் வருடாந்த இதழான தூதன் சஞ்சிகை வெளியீட்டும், நினைவு சின்னம் வழங்கும்  நிகழ்வும் இடம்பெற்றது .

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு – அம்பாறை  கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் புதிய ஆலயம் ஆசிர்வதிக்கப்பட்டு முதல் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .

இன்று இடம்பெற்ற புதிய ஆலய திறப்பு விழா நிகழ்விலும் திருப்பலியிலும் விருத்தினர்களாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி டி . ஜெயசிங்கம் , கிழக்கு பல்கலைக்கழக  துணை உபவேந்தர் வைத்தியர் கே. இ . கருணாகரன் , வடக்கு கிழக்கு மாகான மெதடிஸ்த திருச்சபை மாவட்ட அவை தலைவர் அருட்திரு எஸ் .எஸ் . டெரன்ஸ் ,கத்தோலிக்க ஒன்றிய ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை ஜி . அலக்ஸ் ரொபட் ,மற்றும் கிழக்கு பல்கலைக்கழக கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ ஒன்றிய மாணவர்கள் , கல்வி சாரா ஊழியர்கள் , பொதுநிலையினர் என பலர் கலந்துகொண்டனர் .