Breaking News

மட்டக்களப்பு களுதாவளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு

(லியோன்)

கிழக்கிலங்கையின் சிறப்புமிக்க அம்மன் ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு களுதாவளை ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஆலய வருடாந்த தீமிதிப்பு உற்சவம் நூற்றுக்கணக்கான அடியார்கள் புடைசூழ பக்திபூர்வமாக 25.06.2016 மாலை நடைபெற்றது.
கடந்த  புதன்கிழமை  இரவு திருக்கதவு திறத்தலும் திருக்கும்பம் வைத்தலுடன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு ஆரம்பமானது.

உற்சவத்தின் நான்காம் நாள் அம்பாளுக்கு மற்றும் தீமிதிப்பில் கலந்துகொள்ளும் அடியார்களுக்கான காப்பு கட்டும் நிகழ்வு  இடம்பெற்றது

அதனைத்தொடர்ந்து நேற்று மாலை விசேட பூஜைகளுடன் அம்பாள் ஊர்வலமாக வந்து தீக்குளி காவல் செய்யப்பட்டு தீமிதிப்பு உற்சவம் பக்திபூர்வமாக நடைபெற்றது.

இந்த தீமிதிப்பு வைபவத்தில் களுதாவளை  பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்த  அடியார்கள் ஆலயத்திற்கு வருகைதந்து தமது வழிபாடுகளையும் நேர்கடன்களையும் நிவர்த்தி செய்தனர்.