Breaking News

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் பயிற்சி நெறி


(லியோன்)


 மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான  தேவைப்பாட்டின் மீதான பயிற்சி எனும் தொனிப்பொருளில் சுயதொழில் பயிற்சி நெறி இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  இடம்பெற்றது .

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்கள அனுசரணையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில்  சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் பயிற்சி நெறி இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில்  இடம்பெற்றது .

இந்த பயிற்சி நெறியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர் எஸ் . வினோத் வளவாளராகவும் , மண்முனை வடக்கு பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி . யமுனா புவனேந்திரன் , மாவட்ட செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி . கே . தெய்வேந்திரகுமாரி மற்றும்  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர் .