Breaking News

இலங்கை இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணத்தால் தில்ஷன் விலகல்!

இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் லீட்ஸில் 9-ந்தேதி தொடங்குகிறது. அதன்பின் இலங்கை அணி அயர்லாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.

அதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியிலும் விளையாட இருக்கிறது.

இதற்கான இலங்கை அணி விரைவில் அறிவிக்கப்பட இருந்தது. இந்நிலையில் அந்த அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர் தில்ஷன் சொந்தக் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடமாக ஒருநாள் போட்டிகளில் தில்ஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் மட்டும் 1207 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 52.47 ஆகும். 2016-ல் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்தார்.

தற்போது 39 வயதாகும் தில்ஷன் கடந்த 2013-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.

தில்ஷ்ன் இல்லாததால் இலங்கை அணி அனுபவம் வாய்ந்த தொடக்க வீரர் இல்லாமல் தடுமாறும். அதேவேளையில் குஷால் பெரேரா தொடக்க வீரராக களம் இறக்கப்படலாம். அவருடன் இணைந்து விளையாடும் நபரை இலங்கை கிரிக்கெட் வாரியம் தேடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.