பிரெஞ்சு ஓபன் அரை இறுதியில் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை முகுருசா
கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் 4–ம் நிலை வீராங்கனை கார்பின் முகுருசா (ஸ்பெயின்) கால் இறுதியில் அமெரிக்காவை சேர்ந்த ஷெல்பி ரோஜர்சை எதிர்கொண்டார்.
இதில் முகுருஜா 7–5, 6–3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். 2012–ம் ஆண்டு கிராண்ட்சிலாமில் அறிமுகமான அவர் பிரெஞ்சு ஓபன் போட்டியில் முதல் முறையாக அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு 2014 மற்றும் 2015–ம் ஆண்டில் கால்இறுதி வரை நுழைந்து இருந்ததே சிறப்பான நிலையாக இருந்தது.
முகுருசா அரை இறுதியில் 21–ம் நிலை வீராங்கனையான சமந்தா ஸ்டோசுரை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.
அவர் கால்இறுதியில் 6–4, 7–6 (8–6) என்ற நேர்செட் கணக்கில் பிரன்கோவாவை (பல்கேரியா) வீழ்த்தினார்.



