Breaking News

ISIS அமைப்பிடம் இருந்து ஈராக்கின் பலூஜா நகரம் மீட்பு !

சிரியா மற்றும்  ஈரக்கின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ் அமைப்பினர் அதனை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள இவர்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தற்போது ஐ.எஸ். பிடியில் இருந்த முக்கிய நகரமான பலுஜாவை ஈராக் படையினர் மீட்டு உள்ளனர். பலூஜா நகரின் முக்கிய மருத்துவனை ஒன்றின் வெளியே, ஈராக் நாட்டு கொடியை அசைத்தவாறு தொலைக்காட்சி ஒன்றில் தோன்றினார் ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி.

ஐ.எஸ். அமைப்பினரின் பிடியிலிருந்த ஈராக்கின் மிகப்பெரிய நகரான மொசூலில், பாதுகாப்பு படையினர் ஈராக் கொடியை உயர்த்துவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ராணுவ அதிகாரி ஒருவர், பல வாரச் சண்டைக்கு பிறகு பலூஜா நகருக்கான போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்திருந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு ஈராக் அரசு இதே போன்று, பலூஜா நகரை விடுவித்ததாக கூறியிருந்தது. ஆனால் தெருக்களில் சண்டைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது