சீனாவின் உள்ள உலகின் நீண்ட கண்ணாடி பாலத்தின் உறுதியை சோதிப்பது எப்படி?
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் ஜாங்ஜியாஜீ பகுதியில் உள்ள யூண்டா மலைப்பகுதியில் உலகிலேயே மிக நீளமான, உயரமான கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடிப்பாலமானது இரண்டு உயரமான மலை உச்சிகளுக்கு இடையே அரை கிலோ மீட்டர் நீளத்தில் 980 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் தரைப்பகுதி கண்ணாடியினால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழே உள்ள பள்ளத்தாக்கு பகுதியினை பார்வையிட முடியும். ஜாங்ஜியாஜீ தேசிய பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி நடை பாலத்தின் உறுதி மற்றும் பாதுகாப்பை சோதனை செய்யும் நிகழ்வு சமீபத்தில் நடைப்பெற்றது.
காண்ணாடி பாலத்தின் உறுதியை சோதிப்பதற்கு அரசு அதிகாரிகள் அல்லாமல், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். சுமார் 30 தன்னால்வலர்கள் பெரிய சுத்தியைக்கொண்டு 980 அடி உயர கண்ணாடி பாலத்தில் நின்றுக்கொண்டு அதை உடைக்க முயற்சிக்கும் படங்கள் பார்ப்பவர்களை மிரளவும் ஆச்சரியப்படவும் வைத்துள்ளது. சுத்தியால் ஓங்கி அடிக்கப்பட்ட போதும் சில இடங்களில் ஏற்பட்ட மெல்லிய தெறிப்புகளை தவிர கண்ணாடி பாலத்திற்கு ஒன்றும் ஆகவில்லை.
இது தவிர 11 தன்னார்வலர்கள் அமர்ந்திருந்த 2 டன் எடைக்கொண்ட டிரக் ஒன்றும் பாலத்தின் மீது ஓட்டிச்செல்லப்பட்டு சோதிக்கப்பட்டது.



