கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பம்
மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமீபகாலமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து கல்வி நடவடிக்கைகள் இன்று (09) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் மாணவர் ஒருவர் சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்ப்பட்ட குழப்பநிலை காரணமாக பல்கலை கழக கல்விநடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



