Breaking News

அவுஸ்திரியாவில் நாய்களுக்கு 5 நட்சத்திர ஓட்டல்

ஓட்டல்களில் மனிதர்கள் மட்டுமே தங்க அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களது செல்லப் பிராணிகளான நாய், பூனை போன்றவைகளை உடன் அழைத்து சென்று தங்க அனுமதிப்பதில்லை.

ஆனால் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள ‘ஹயாத் வியன்னா’ என்ற 5 நட்சத்திர ஓட்டல் நாய்கள் மற்றும் பூனைகள் சொகுசாக தங்க அனுமதித்துள்ளது.

ஓட்டலில் தங்கும் வாடிக்கையாளர்கள் தங்களுடன் அழைத்து வரும் நாய்களுக்கு என்று தனியாக சொகுசு அறைகள் உள்ளன. அவை அங்கு தனி ஊழியர்கள் மூலம் பராமரிக்கப்படுகின்றன.

அவற்றின் உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு மட்டும் ஒருநாள் இரவு ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அதுபோக அவை தங்கும் அறையின் செலவு பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கு தனியாக பணம் பெறப்படுகிறது. இதேபோன்று பூனைகளும் அந்த ஓட்டலில் பராமரிக்கப்படுகிறது.

லண்டனில் உள்ள ‘மைல் ஸ்டோன்’ என்ற ஓட்டலிலும் நாய்கள் 24 மணி நேரமும் பராமரிக்கப்படுகின்றன.