மக்கள் தீர்ப்பின் பிரதிபலிப்பாக பிரட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி...
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற ஆதரவு தெரிவித்து பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்ததன் எதிரொலியாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுகிறார்.
முன்னதாக, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.
ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 லட்சத்து 41 ஆயிரத்து 241 (51.9 சதவீதம்) பேரும், விலக வேண்டும் என 51.5 ஒரு கோடியே 74 லட்சத்து 10 ஆயிரத்து 742 (48.1 சதவீதம்) பேரும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 12 லட்சத்து 69 ஆயிரத்து 501 வாக்கு வித்தியாசத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகி விட்டது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து நீடிப்பதையே பிரிட்டன் நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் விரும்பினார். ஐரோப்பிய கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்று கூறியிருந்த அவர், அதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டிருந்தார்.
வாக்கெடுப்பின் முடிவு அவரது விருப்பத்துக்கு மாறாக அமைந்துள்ளதால், வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடையும் டேவிட் கேமரூனின் பிரதமர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என கருதப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக டேவிட் கேமரூன் இன்று அறிவித்துள்ளார். தனது ராஜினாமா முடிவை அறிவித்தபின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், ‘மக்களின் கருத்தாக எதிரொலித்த விலகல் முடிவு செயலளவிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.
நமது நாடு என்னும் கப்பலை எதிர்காலத்தின் அடுத்தபடியை நோக்கி வழிசெலுத்தும் மாலுமியாக நான் நீடிப்பது சரியாக இருக்காது என்பதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளேன்.
எனவே வரும் அக்டோபர் மாதம் இந்த நாட்டின் புதிய பிரதமராக வேறொருவர் பதவி ஏற்றுக் கொள்வார்’ என கண்கலங்கிய நிலையில் கேமரூன் அறிவித்தார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான இதர நடவடிக்கைகளை ‘புதிய தலைமை’ மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.