திருமணத்திற்கு முன்பே சமந்தா?
தனது காதலர் நாக சைதன்யாவுடன், நடிகை சமந்தா ஒரே வீட்டில் வசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் தான் ஒருவரைக் காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்றும் கூறியிருந்தார். சமந்தா காதலிப்பது டோலிவுட் நடிகர் நாக சைதன்யாவைத் தான் என்று கிசுகிசுக்கப்பட்டது. மேலும் இந்த வருட இறுதியில் இருவரின் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.