ஸ்ருதி நடிகை மட்டுமில்லை நட்சத்திரம் - கமல்
சபாஷ் நாயுடு படத்தில் கமலுடன் அவரது மூத்த மகள் ஸ்ருதி இணைந்து நடிகின்றார் எனினும் இயக்குனருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படத்தை இயக்கவும் செய்தார் கமல். அப்படி ஒரே படத்தில் தனது மகளுடன் இணைந்து நடிக்கவும், இயக்கவும் முடிந்திருக்கிறது கமலால். அந்த பெருமிதம் அவரது பேச்சில் தெரிகிறது.
அதுபற்றி அவர் கூறுகையில் 'முதல் முதலாக இந்தப் படத்தில் ஸ்ருதியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இதற்கு முன் நடிகர்களை இயக்கியிருக்கிறேன். ஸ்ருதி ஒரு நடிகை மட்டுமில்லை, ஒரு நட்சத்திரம். முதல்முறையாக ஒரு நட்சத்திரத்தை இயக்கியது புதுவித அனுபவமாக இருந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.
சபாஷ் நாயுடு டிசம்பர் 1 திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.