பிறந்து பதின்மூன்று நாட்களேயான பெண் சிசு மரணம்
தாய்ப்பால் பொறுத்தால்பி றந்து பதின்மூன்று நாட்களேயான பெண் சிசு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பொகவந்தலாவை மோறா தோட்டத்தில் இன்று(5) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை மூன்று மணியளவில், அழுத சிசுவிற்கு தாய் பாலூட்டி தூங்க வைத்ததன் பின்னர் காலை ஆறு மணிவரைக்கும் சிசு அசைவின்றி இருந்ததால் பெற்றோர் உடனடியாக சிசுவை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் சிசுவை பரிசோதித்த வைத்தியர்கள், தாய்ப்பால் பொறுத்ததால் சிசு ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.