மட்டக்களப்பு –எல்லை வீதி ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்
(லியோன்)
மட்டக்களப்பு –எல்லை வீதி ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய
வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் இன்று நண்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
ஆலய மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ சிவாச்சாரியார்
குருதிலகம் ஈசான சிவஸ்ரீ வ .கு .சிவானந்தம் குருக்கள் தலைமையில் இன்று விசேட யாக பூசை, ஸ்நபன பூசைகள் இடம்பெற்று விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து கொடியேற்ற நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்
தொடர்ந்து தம்ப பூசையுடன் வசந்த மண்டப பூசை இடம்பெற்று சுவாமி உள்வீதி ,வெளி வீதி உலா வருதல் இடம்பெற்றது .
ஆலய மகோற்சவ காலங்களில் தினமும் முற்பகல் 10.00
மணிக்கும் மாலை 07.00 மணிக்கும் விசேட யாக
பூஜை ,ஸ்நபன அபிஷேகம் ,தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதி ,
வெளி வீதி உலா வருதல் இடம்பெறும்.
எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு
அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்த குளத்தில் தீர்தோற்சவம் இடம்பெற்று மாலை 06.00 மணியளவில் மூலவர் பூஜையுடன் கொடியிறக்கப்பட்டு
ஆலய மகோற்சவம் நிறைவு பெறும்.
இன்று இடம்பெற்ற கொடியேற்ற விசேட பூஜை
நிகழ்வுகளில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர் .