மண்முனை வடக்கு பிரதேச செயலக ( கராட்டி) தற்பாதுகாப்பு கலை கழகங்களுக்கிடையிலான போட்டி
(லியோன்)
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட 2016
ஆம் ஆண்டுக்கான பதிவு செய்யப்பட ( கராட்டி) தற்பாதுகாப்பு கலை கழகங்களுக்கிடையிலான போட்டி இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும் 2016 ஆம் ஆண்டுக்கான பதிவு செய்யப்பட (
கராட்டி) தற்பாதுகாப்பு கலை கழகங்களுக்கிடையிலான
போட்டிகள் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் மண்முனை வடக்கு
பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் இன்று இடம்பெற்றது . .
பிரதேச செயலக மட்டத்தில் பதிவு செய்யப்பட( கராட்டி) தற்பாதுகாப்பு கலை
கழகங்களுக்கிடையில் நடத்தப்படுகின்ற போட்டிகளில் வெற்றி பெற்ற கழகங்கள் மாவட்ட
மட்டத்தில் நடத்தப்படுகின்ற போட்டிகளில் பங்கு பற்றவுள்ளனர் .
இன்று மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் இடம்பெற்ற (
கராட்டி) தற்பாதுகாப்பு கலை போட்டி
நிகழ்வில் நடுவர்களாக இலங்கை ( கராட்டி) தற்பாதுகாப்பு கலை சம்மேளன நடுவர்கள் போட்டிகளுக்கு நடுவர்களாக
கடைமையாற்றினர் .
இந்த போட்டி நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு கராட்டி கழகங்களின் உறுப்பினர்கள் , கழகங்களின்
பயிற்றுவிப்பாளர்கள் , கலந்துகொண்டனர் .