மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுகுற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கவிதைப் பயிற்சிப் பட்டறை
(லியோன்)
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுகுற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கவிதைப் பயிற்சிப்
பட்டறை இன்று பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இன்று இடம்பெற்ற கவிதைப் பயிற்சி பட்டறையானது பாடசாலை மாணவர்களின்
படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் அவர்களின் திறன் அபிவிருத்தியை மேம்படுத்தும்
முகமாகவும் இந்த பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகின்றது .
இந்த பயிற்சி பட்டறையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக
பிரிவுக்குற்பட்ட பாடசாலை மாணவர்களும்
வளவாளர்களாக கவிஞர் வாசுதேவன் , கவிஞர்
மலர்ச் செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர் .