Breaking News

மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா


(லியோன்)

மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர  பெண்கள் தேசிய பாடசாலையின்  வருடாந்த பரிசளிப்பு  விழா   01.07.2016  வெள்ளிக்கிழமை இடம்பெற்றது 
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர  பெண்கள் தேசிய பாடசாலையின்  வருடாந்த பரிசளிப்பு  விழா நிகழ்வு கல்லூரி  அதிபர் திருமதி கனகசிங்கம்  தலைமையில் 01.07.2016 வெள்ளிக்கிழமை  பாடசாலை  பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .

பாடசாலையின்  வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வில் மாணவர்களின்  கலை கலாசார பாரம்பரிய நிகழ்வுகளும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது .


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  கல்வி ராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் ,மாகாணசபை உறுப்பினர்கள் , வலயக் கல்விப்பணிப்பாளர்கள், அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , பாடசாலை  அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்  கலந்துகொண்டனர்