Breaking News

ஆசியாவை இலக்குவைக்கும் ISIS இன் வரை படத்தில் இங்கயும் உள்ளடக்கம் ?

ஐரோப்பாவை திண்டாட வைக்கும் வகையில் தொடர் தாக்குதல்களை நடத்தும் ISIS தீவிரவாத அமைப்பின் அண்மைக்கால இலக்கான தெற்காசிய நாடான பங்களாதேஷின் டாக்கா நகரிலுள்ள உணவகம் மீது தாக்குதல் நடத்தி, சுமார் 20 பேரின் உயிர்களை பலியாக்கியது. 

இதையடுத்தது ISIS குறித்து இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதோடு, புலனாய்வுத் துறையினரும் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாதவகையில் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ISIS இன் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுகுரிய தாக்குதல் திட்ட வரைபடமொன்று ஊடகமொன்றில் வெளிடிடப்பட்டநிலையில் அதில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.