நல்லாட்சிக்கான கொள்கைகள் தொடர்பான இளைஞர் ,யுவதிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு
(லியோன்)
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் ,யுவதிகளுக்கான நல்லாட்சிக்கான கொள்கைகள்
தொடர்பான ஒரு நாள் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது
.மட்டக்களப்பு
கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின்
சமாதான பிரிவின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கிராமங்களில் இயங்குகின்ற சமாதான குழு
உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கான
நல்லாட்சிக்கான கொள்கைகள் தொடர்பாக இளைஞர் ,யுவதிகளுக்கு தெளிவுப்படுத்தும்
விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு
கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குன அருட்தந்தை ஜெரோம் டிலிமா தலைமையில் மட்டக்களப்பு
சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் , யுவதிகள் கலந்துகொண்டனர் .இந்நிகழ்வில் வளவாளராக பயிற்றுவிப்பாளர் பேரின்பநாயகம்
கலந்துகொண்டார்