Breaking News

உலக சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

(லியோன்)

 உலக சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு  இன்று  மாபெரும் விழிப்புணர்வு பேரணி  இடம்பெற்றது .

மட்டக்களப்பு பிரதேச மனித உரிமை ஆணைக்குழு இனைப்பாளர் ஜனாப் எ .சி .எஸ் . அஸீஸ் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி கல்லடி பாலம் வரை இடம்பெற்றது .   . 

இந்த பேரணியின் போது சித்திரவதைகள் தொடர்பாகவும் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தியவாறு பாடசாலை மாணவர்களும் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , சிறைச்சாலை அதிகாரிகள் , அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் .  


இதன் போது சித்திரவதைகள் தொடர்பாக   விழிப்புணர்வு வீதி நாடகமும் இடம்பெற்றது.