கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்
(லியோன்)
கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் இன்று மட்டக்களப்பு
மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார் .
இந்த விஜயத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு
விஜயத்தை மேற்கொண்டு அந்த பாடசாலைகளின்
அபிவிருத்தி தொடர்பாக அதிபர் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடியதோடு
கிழக்குமாகான தேசிய பாடசாலைகளின் அதிபர்களையும்
சந்தித்து பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியுள்ளார் .
இந்நிகழ்வு இன்று மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலத்தில் இடம்பெற்றது .
இந்த சந்திப்பின் போது கிழக்குமாகாண தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் ,மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண கல்வி பணிப்பாளர்கள் , வலயக் கல்வி அலுவலக
பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்