மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவர்களின் விழிப்புணர்வு நடை பவணி
(லியோன்)
இலங்கையின் இருந்து முற்றாக பொலித்தின் பாவனையினை முற்றாக ஒழிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவின் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு
மாநகர சபையினால் பொலித்தின் பாவனையினை முற்றாக
ஒழிக்கும் திட்டத்தினை மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதனுடன் இணைந்ததாக மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய
மாணவர்களினால் பொலித்தின் பாவனையினை தடுக்கும் நோக்குடன் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
பாடசாலை அதிபர் திருமதி . என்
.தர்மசீலன் தலைமையில் விழிப்புணர்வு நடை பவணி இடம்பெற்றது .
இந்த நடை பவனியின் போது பொலித்தின் பைகளுக்கு மாற்றிடான பைகள் மற்றும்
கூடைகள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுடன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கும் பொலித்தின் பாவனையினை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வு
அறிவுறுத்தப்பட்டது .
இடம்பெற்ற நடை பவனியில் அமிர்தகழி சித்தி விநாயகர் மகா வித்தியாலய
அதிபர் , மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள்
என பலர் கலந்து கொண்டனர்.