Breaking News

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு பேண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு பேண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது
.மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு  பாடசாலை நலன் விரும்பிகளால் சுமார் 1 50 ,000.00  பெறுமதியான பேண்ட் வாத்திய உபகரணங்கள்  பாடசாலைக்கு வழங்கும் நிகழ்வு அதிபர் கே .சிறிதரன் தலைமையில் பாடசாலையில் இன்று இடம்பெற்றது .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , ஏறாவூர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம் .பாலசுப்பிரமணியம் , மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பாடசாலை நலன் விரும்பிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .