மகளின் ஆபாச செல்பியை நிறுத்திய தந்தை வினோதசெல்பி
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மகள் கவர்ச்சியான செல்பி படம்பிடித்துக்கொள்வதை நிறுத்துவதற்கு விநோதமான வழியை கையாண்டுள்ளார். மகளைப் போன்றே தானும் பிடித்துக்கொள்வதே அவ்வழி.
கிறிஸ் மார்ட்டின் எனும் இவர் அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த நகைச்சுவையாளர் ஆவார். பதின்மர் வயதான தனது மகள் அலங்கோலமான தோற்றங்களுடன் செல்பி படம் பிடித்துக்கொள்வது கிறிஸ் மார்ட்டினுக்குப் பிடிக்கவில்லை.
இதை நிறுத்தச் செய்வதற்காக தனது மகள் பிடித்த செல்பி படங்களில் உள்ளதைப் போன்றே தானும் “அலங்காரம்” செய்துகொண்டு செல்பி படம் பிடித்துக்கொண்டார் மார்ட்டின். இவ்வாறு படம்பிடித்துக்கொள்ள வேண்டாமென மகளிடம் கூறுவதற்குப் பதிலாக, சிறந்த வழியொன்றை கையாள்வதற்கு நான் விரும்பினேன்” என கிறிஸ் மார்ட்டின் கூறியுள்ளார்.



