ஒரின சேர்க்கையாளர் பேரணியை தொடங்கி வைத்த கனேடிய பிரதமர்
கனடாவில் ஒரின சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள்ளது. அதையொட்டி தலைநகர் டொராண்டோவில் ஓரின சேர்க்கையாளர்கள் மிக பிரமாண்டமான பேரணி நடத்தினார்கள். அதில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
பேரணி தொடங்கும் நிலையில் தயாராக இருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கனடா பிரதமர் ஐஸ்டின் டிருடியோ அங்கு வந்தார். பின்னர் கனடா நாட்டின் தேசிய கொடியை அசைத்து பேரணியை தொடங்கிவைத்தார். ஓரின சேர்க்கையாளர்களுடன் அவரும் பேரணியில் பங்கேற்றார்.
அப்போது பேரணியில் கலந்து கொண்டவர்களுடன் கைகுலுக்கினார். ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டார். பிரதமரின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் ஜஸ்டினின் நடவடிக்கைகளுக்கு விண்ணைப் பிளக்கும் வகையில் கை தட்டல்கள் கிடைத்தன. அதுவரை ஓரின சேர்க்கையாளர் பேரணியில் கனடா பிரதமர் யாரும் இதுவரை கலந்து கொண்டதில்லை.
ஆனால், இளைஞரான ஜஸ்டின் சர்வசாதாரணமாக கலந்து கொண்டு சரித்திர சாதனை படைத்தார். பேரணியில் பங்கேற்றவர்கள் சமீபத்தில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஓர்லண்டோ ஓட்டல் துப்பாக்கி சூட்டில் பலியான 49 ஓரின சேர்க்கையாளர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.