Breaking News

26 தமிழர்களை கொலை செய்ததாக குறஞ்சாட்டப்பட்ட சந்தேகநபர்களான 6இராணுவ கோப்ரல்களும் விடுதலை...

மூதூர், குமாரபுரம் கிராமத்தில் 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு இராணுவ கோப்ரல்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வழக்கின் தீர்ப்பானது அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் ஏழுபேர் கொண்ட ஜூரிகலினால் போதுமான ஆதாரபூர்வமான சாட்சியங்கள் இல்லை என்றகாரணத்தினால்  இவர்களை விடுதலை செய்வதற்கு ஏகமனதாகச் சிபாரிசு செய்துள்ளதாகதெரிவிக்கப்படுகிறது, எனினும்   சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், நேரில்கண்ட சாட்சிகள் மற்றும் கிராம மக்கழும் சாட்சியங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.