மஹிந்த வைக்கப்பட்டிருந்த அதே சிறையில் நாமல் !
புதிய மெகசின் சிறைச்சாலையில் ஈ பிரிவில் இன்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் மஹிந்த விளக்கமறியலில் வைக்கப்பட்ட அதே சிறையில் தற்போது நாமலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவருக்கு உறங்குவதற்கென வழங்கப்பட்டுள்ள துணியினை தவிர மற்றய சந்தேகநபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வசதிகளே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. எனினும் நேற்று முதல் தனக்கான உணவை தனது வீட்டிலிருந்து பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்ததுக்கிணங்க அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது



