ஒத்துழைக்காவிடின் அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படும் : மைத்திரி எச்சரிக்கை
இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னேற்றகரமான எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஒத்தாசை வழங்காத வழங்க மறுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சியின் அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மகிந்தவிற்கு ஆதரவு வழங்கும் கூட்டு எதிரணியில் அங்கம்வகிக்கும் இலங்கை சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று மாலை இடம்பெயற்ற சந்ததிப்பின்போதே ஜனாதிபதி இவ்வெச்சரிக்கையினை விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



