Breaking News

கிராண்ட்சிலாமில் செரீனா வில்லியம்சின் 300வது வெற்றி

உலகின் தலைசிறந்த வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், விம்பிள்டன் போட்டியில் 4–வது சுற்றுக்கு முன்னேறினார். அவர் 3–வது சுற்றில் 6-3, 6-0 என்ற கணக்கில் ஜெர்மனியை சேர்ந்த அன்னிகாபேக்கை வீழ்த்தினார்.

அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் கிராண்ட்சிலாம் போட்டிகளில் பெற்ற 300-வது வெற்றியாகும். இந்த வெற்றியை பெற்ற 2-வது வீராங்கனை ஆவார்.

மார்ட்டினா நவரத்தி லோவா (அமெரிக்கா) 306 கிராண்ட்சிலாம் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளார். கிரிஸ்வொர்ட் 299 வெற்றியும், ஸ்டெபிகிராப் 278 வெற்றியும் பெற்று 3-வது மற்றும் 4-வது இடங்களில் உள்ளனர்.

செரீனா ஒட்டுமொத்த டென்னிசிலும் 752-வது வெற்றியை பெற்றுள்ளார். 123 ஆட்டத்தில் தோற்றுள்ளார்.