Breaking News

ஏமனில் இருந்து சவுதிக்கு ஏவுகணைத்தாக்குதல்

ஏமன் நாட்டில் இருந்து இன்று ஏவப்பட்ட சக்திவாய்ந்த ஏவுகணையை சவுதி அரேபியா இடைமறித்து தாக்கி அழித்ததாக தெரியவந்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் மாகாணத்தின் அபா நகரை நோக்கி இன்று காலை சுமார் 6.10 மணியளவில் ஒரு சக்திவாய்ந்த ஏவுகணை பாய்ந்து சென்றதாகவும், கமீஸ் முஷைத் நகரின் அருகே வான்வெளியில் அந்த ஏவுகணை இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாகவும் சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏமன் நாட்டில் இருந்து ஏவப்பட்டதாக கருதப்படும் இந்த ஏவுகணையின் மூலம் ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் பகைநாடான சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்த முயன்றிருக்கலாம் என தெரியவருகிறது.