ஷங்கர் இயக்குனர் மட்டுமல்ல ஒரு விஞ்ஞானி.... 2.0 வில்லன் அக்ஷய் பாராட்டு
2.0 படத்தில் வில்லனாக நடித்துவரும் அக்ஷய் குமார் பலமுறை ரஜினியை பாராட்டிவிட்டார். அவர் நின்றால் நடந்தால் ஏன் தூசி தட்டினால்கூட ஸ்டைல்தான் என்றெல்லாம் புகழ்ந்திருக்கிறார்.
இப்போது இயக்குனர் ஷங்கரையும் புகழ்ந்துள்ளார். எப்படி?
ஷங்கர் வெறும் இயக்குனர் மட்டுமில்லை, அவர் ஒரு விஞ்ஞானி என்று பாராட்டியுள்ளார். அத்துடன் புதுமைகளை அவர் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பதால் அவரை விஞ்ஞானி என்றேன் என விளக்கமும் தந்துள்ளார்.
2.0 படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இனி ஐம்பது சதவீத படப்பிடிப்பு உள்ளது. அத்துடன் கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள். படம் கண்டிப்பாக 2018 -இல்தான் வெளியாகும் என படக்குழு உறுதிபட தெரிவித்துள்ளது.