Breaking News

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் 19வயது இளைஞன் பாய்ந்து தற்கொலை

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் 19வயது இளைஞன் பாய்ந்து தற்கொலை-படங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சுமார் 19 வயதுடைய இளைஞன் உடலம் தற்போது கப்பலேந்திமாதா கோவிலின்முன்பாக உள்ள ஆற்றங்கரையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி தற்கொலைச் சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாலத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனை காப்பாற்றும் முயற்சியில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் ஈடுபட்டநிலையிலும் முயற்சி பயனளிக்வில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது .

தற்கொலை செய்த இளைஞன் மட்டக்களப்பு கூழாவடி பிரதேசத்தைச்  சேர்ந்த கிஷோர் (வயது-19) என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.