Breaking News

இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்ற நிகழ்வு

(லியோன்)

 மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய வருடாந்த திருவிழா  01.07.2016 இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய வருடாந்த திருவிழா  கொடியேற்ற நிகழ்வு 01.07.2016 வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணியளவில் பங்கு தந்தை அருட்பணி லெஸ்லி ஜெகாந்தன் தலைமையில்  இடம்பெற்றது .

ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து திருச்செபமாலையும் , விசேட திருப்பலியும் ஒப்புகொடுக்கப்பட்டது .
திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு   
திருச்செபமாலையும் ,திருப்பலியும் இடம்பெறும்.

எதிர்வரும் 09.07.2016  சனிக்கிழமை காலை 06.30  மணிக்கு விசேட திருப்பலியும் ,புதுநன்மை ,உறுதிப்பூசுதல்  ஆகிய தேவ அருள் அடையாளங்கள்   மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் ஜோசப் கிங்ஸ்லி  சுவாமிபிள்ளை தலைமையில் வழங்கப்படும்  

இதனை தொடர்ந்து மாலை 05.30 மணிக்கு திரு இருதயநாதரின் திரு உருவம் பவனியாக வழமையான வீதிகளினுடாக எடுத்துவரப்பட்டு, ஆலயத்தில் விசேட   திருப்பலியும்  ,திவ்விய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும் இடம்பெறும் .

10.07.2016  ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு  அருட்பணி ஆர் .திருச்செல்வம் அடிகளாரின் தலைமையில் விசேட  திருநாள்  திருப்பலியும் தொடர்ந்து கொடியிறக்கத்துடன்  ஆலய வருடாந்த திருவிழா நிறைவுபெறும் .