Breaking News

சுவையுடன் சத்தான மசாலா ஸ்வீட் கார்ன்

தேவையான பொருட்கள் :

ஸ்வீட் கார்ன் - ஒரு கிண்ணம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - பாதி
கொத்துமல்லித் தழை - சிறிது
வெண்ணெய் - கால் தேக்கரண்டி
சாட் மசாலா - கால் தேக்கரண்டி
ஓமப் பொடி - சிறிது

செய்முறை

* வெங்காயம், தக்காளி, கொத்துமல்லித் தழையைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

* ஸ்வீட் கார்னை அரை வேக்காட்டில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். 

* வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு சூடானதும் அதில் உதிர்த்து வைத்துள்ள ஸ்வீட் கார்ன் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். 

* அதனுடன் சாட் மசாலாவைச் சேர்த்து கிளறி இறக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி கலவையை சேர்த்து, ஓமப்பொடி, கொத்துமல்லித் தூவிப் பரிமாறவும்.

* சத்தான சுவையான மசாலா ஸ்வீட் கார்ன் ரெடி.